கொரானா தடுப்பூசி முகாம்
சென்னை பெரும்பாக்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்களுக்கான கொரானா தடுப்பூசி முகாம் (04/01/22) நடைபெற்றது. 15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான கொரானா தடுப்பூசி முகாம் நடத்த வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்ததையொட்டி பெரும்பாக்கம் குடியிருப்பு வளாகத்தில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலையம் இந்த ஏற்பாட்டினைச் செய்திருந்தது. கல்லூரி முதல்வர் முனைவர் ச. சக்தி, கணினி அறிவியல் துறைத் தலைவர் பேராசிரியர் பி. மலையரசு, தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் இரா.பச்சியப்பன், மருத்துவர் காயத்ரி, மருத்துவர் ரேணுகா மற்றும் முதலாம் ஆண்டு மாணவர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டனர். கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டம், செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவற்றின் திட்ட அலுவலர்கள் பேராசிரியர் முனைவர் த. செந்தில்குமார் பேராசிரியர் முனைவர் மு. சீமானம்பலம் ஆகியோர் இந்த முகாமை ஒருங்கிணைத்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட முதலாமாண்டு மாணவ மாணவியர் இந்தத் முகாமில் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.
செய்தியாளர் குமார்