1,158 தெருக்களில் கொரோனா பாதிப்பு… சென்னை மாநகராட்சி அதிர்ச்சி!
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஜனவரி 4-ம் தேதி 1,03,573 பேரிடம் நடத்தப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை 2,731 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக சென்னை நாள்தோறும் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் 1489 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.சென்னையில் மட்டும் இதுவரை 93 பேர் புதிய வகை ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கபப்ட்டுள்ளனர். 15 மண்டலங்களில் அதிகபட்சமாக தேனாம்பேட்டை மண்டலத்தில் மட்டும் 228 தெருக்களில் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
செய்தி மீனாட்சி தமிழ் மலர் மின்னிதழ்