ஆன்லைன் சூதாட்டத்திற்கு விரைவில் முற்றுப்புள்ளி – முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழகத்தில் இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் நேற்று கலைவாணர் அரங்கத்தில் துவங்கியது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். இதையடுத்து இன்று 2-வது நாளாக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதன்முறையாக கேள்வி – பதில் நேரம் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இந்த கேள்வி-நேரத்தின்போது அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வைத்தியலிங்கம், ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது தொடர்பாக கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆன்லைன் சூதாட்டத்திற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார். மேலும், ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
செய்தி ராஜா தமிழ் மலர் மின்னிதழ்