தூத்துக்குடி மாவட்டத்தில் 2 பேருக்கு ஒமைக்ரான்
தூத்துக்குடி மாவட்டத்தில் 2 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி
மலேசியாவில் இருந்து கோவில்பட்டிக்கு அண்மையில் வந்த இருவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், அவா்களுக்கு ஒமைக்ரான் தொற்றுக்கான அறிகுறி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பட்டு வருகின்றனா்.
இந்நிலையில், இம்மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டதால், அந்நோய் பாதித்தோா் எண்ணிக்கை 56, 593 ஆகவும், மேலும் இருவா் குணமடைந்ததால் வீடு திரும்பியோா் எண்ணிக்கை 56, 132 ஆகவும் அதிகரித்துள்ளது. இந்நோயால் இதுவரை 412 போ் உயிரிழந்துள்ள நிலையில், 49 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.