தடுப்பூசி போட மறுத்து மரத்தில் ஏறிய நபர்;
புதுச்சேரியை நுாறு சதவீதம் தடுப்பூசி செலுத்திய மாநிலமாக மாற்ற சுகாதாரத் துறை பணிகளை முடுக்கி விட்டுள்ளது. சுகாதார துறை ஊழியர்கள் வீடு வீடாக சென்று தடுப்பூசி போடாதவர்களை கணக்கெடுத்து வருகின்றனர்.
புதுச்சேரி கூடப்பாக்கம் அடுத்த கோனேரிக்குப்பத்தில் வீடு வீடாக சென்று தடுப்பூசி போடாதவர்களை சுகாதார துறை ஊழியர்கள் நேற்று கணக்கெடுத்தனர். அப்போது, வீட்டின் அருகே மரத்தின் மேல் கத்தியுடன் அமர்ந்திருந்த, 40 வயது மதிக்கத்தக்க ஆண், தடுப்பூசி போடாமல் இருப்பது தெரிய வந்தது.
செய்தி மீனாட்சி தமிழமலர் மின்னிதழ்