2031க்குள் குடிசையில்லாத தமிழகமாக மாற்றுவோம்…

அனைவருக்கும் வீடு… 2031க்குள் குடிசையில்லாத தமிழகமாக மாற்றுவோம் – மு.க ஸ்டாலின் உறுதி

தமிழகத்தில் 9.5 லட்சம் ஏழை மக்களுக்கு வீடு கட்டி தரும் திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக மு.க ஸ்டாலின் கூறியுள்ளார். 2031ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தை குடிசை இல்லாத மாநிலமாக மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கிரடாய் சார்பில் ஸ்டேட்காந்2021 என்ற 2ஆம் நாள் மாநாடு சென்னை எம்.ஆர்.சி நகரில் நடைபெற்றது. இந்த மாநாட்டை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், வேளாண் துறைக்கு அடுத்தப்படியாக கட்டுமானத்துறை உள்ளது. கட்டுமானத்துறை எப்போதும் வளரும் தொழிலாக உள்ளது என்றார்.

தமிழ்நாட்டில் வீடு, மனைகள் விற்பனை 17 சதவீதம் அதிகரித்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் மட்டும் வீடு,மனை பத்திரப்பதிவு மூலம் ரூ.5973 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தார். முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை நாளை வெளியிடுகிறார்.. கூடுதல் கட்டுப்பாடுகள் அமலாகிறதா?முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை நாளை வெளியிடுகிறார்.. கூடுதல் கட்டுப்பாடுகள் அமலாகிறதா?
கீழடி அகழாய்வு
பொருளாதார வளர்ச்சி
3000 ஆண்டுகளுக்கு முன்பு நமது தமிழ் சமூகம் வளர்ந்து இருக்கிறது என்பதை கீழடி அகழாய்வு மூலம் அறியமுடிகிறது. மாநில பொருளாதார வளர்ச்சி சிறப்பாக முன்னேறி வருவதை குறியீடுகள் காட்டுகின்றன.

சேமிப்பு கிடங்குகள்
2 மடங்கு வளர்ச்சி
கடந்த காலாண்டில் தொழிற்சாலைகள் சேமிப்பு கிடங்குகள் 4.4 மில்லியன் சதுரஅடி பரப்புக்கு அமைக்கப்பட்டுள்ளன. கடந்த நிதியாண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடும்போது 2 மடங்கு வளர்ச்சி அதிகரித்துள்ளது. ஒற்றைச்சாரள முறை:
12 மண்டலங்கள்
கட்டுமானத்துறையில் பல புதிய முயற்சிகளை அரசு மேற்கொண்டுள்ளது. மனைப்பிரிவு, மனைகளுக்கு 60 நாளில் அனுமதி அளிப்பதற்கான ஒற்றைச்சாரள முறை அறிமுகப்படுத்தப்படும். தமிழ்நாட்டை 12 மண்டலங்களாக அறிவித்து திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளதாக கூறினார். பெரிய திட்டம்: வரைபட அனுமதி 8 ஆண்டுகள்
கிளாம்பாக்கம் , குத்தம்பாக்கம் பேருந்து நிலையங்கள் விரைவில் திறக்கப்படும். 2026 முதல் 2046ஆம்ஆம் ஆண்டுக்குள் சென்னையின் வளர்ச்சிக்கான பெருந்திட்டம் செயல்படுத்தப்படும். வரைபட அனுமதியின் செல்லத்தக்க காலம் 5 ஆண்டில் இருந்து 8 ஆண்டுகளாக உயர்த்தப்படும் என்றும் கூறினார்…

செய்தியளர் சையது தமிழ் மலர் மின்னிதழ்

Leave a Reply

Your email address will not be published.