இணையதள பத்திரிகைக்கு தமிழக அரசு அங்கீகாரம் வழங்க கோரி…
10 ஆண்டுகளுக்கு மேலாக பதிவு பெற்ற இணையதளத்துக்கு தமிழக அரசு உடனடியாக அங்கீகாரம் வழங்க கோரி…
தமிழக முதல்வருக்கு மூத்த பத்திரிகையாளர் கோரிக்கை!.
தமிழ்மலர் மின்னிதழ் டிசம்பர் 14.
சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் பதிவு செய்த இணையதள பத்திரிகை அனைத்துக்கும்,
தமிழக அரசு அங்கீகாரம் வழங்கி, அவர்களுக்கு தமிழக அரசு வழங்கும் சலுகைகள் முழுமையாகக் கிடைக்கப் பெற வழிவகை செய்யும் வகையில், ஆணை பிறப்பிக்க தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை ஆசை மீடியா நெட்வொர்க் நிறுவனர் மூத்த பத்திரிகையாளரும், மற்றும் 2021 தமிழ்நாடு ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் மாநில தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள, சிரஞ்சீவி அனீஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பத்திரிகை துறை என்பது பல ஆண்டுகளாகவே நலிவடைந்த நிலையில் இருந்து வருகிறது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
மேலும் இதில் பணிபுரிந்த மூத்தப் பத்திரிகையாளர்கள் பலரும் வேலையின்றி தவித்து வருகின்றனர். அப்படி பணி புரிந்தாலும்
அவர்களுக்கு சம்பள பிரச்சனை என்று ஓன்று முழுமையாகக் கிடைப்பதில்லை, இதனால் அவர்கள் குடும்ப சூழ்நிலை மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்படுகின்றன.
மூத்த பத்திரிக்கையாளர்கள் மற்றும் செய்தியாளர்கள் முழுமையாக தங்களுடைய வாழ்க்கையை இந்த துறையில் அர்ப்பணித்துள்ளனர் என்பதுதான் உண்மை.
அப்படிப்பட்டவர்களுக்கு இதுவரை ஒரு முழுமையான தீர்வு கிடைக்கவில்லை. தற்போது தங்களுடைய ஆட்சியில் பத்திரிக்கையாளர்களுக்கு சந்தோஷமான விஷயங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இருப்பினும் பலருடைய வாழ்க்கை கேள்விக் குறியாக இருக்கின்றன.
தமிழகத்தில் உள்ள அனைத்து உண்மையான செய்தியாளர்களுக்கும், தங்கள் அறிவித்துள்ள பல்வேறு சலுகைகள் கிடைக்கப் பெறுவது இல்லை. காரணம் அவர்களுக்கு இடையூறுகள் அதிகமாக இருக்கின்றன.
இதை கருத்தில் கொண்டு, தமிழக அரசு முழுமையான கவனம் செலுத்தி, இந்த அரிய பல சலுகைகள் அனைத்தும் உண்மையான பத்திரிகையாளர்களுக்கு சென்றடைய தனிக்குழு ஒன்றை அமைக்க வேண்டும். அது மட்டுமல்ல,
பத்திரிக்கை மற்றும் மீடியா துறையில் வேலை இல்லாமல் ஒரு சிலர் இணையதளத்தில் அவர்களே சொந்தமாக தங்களுடைய பத்திரிகை பெயரை பதிவு செய்து, பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால், இதிலும் அவர்கள் முழுமையாக வெற்றி பெறுவது சுலபமான வழி இல்லை. சில நெருக்கடிகள் பொருளாதார சூழ்நிலை பின்ணிக் கொள்கின்றன. அப்படி சொந்தமாக இணையதளத்தில் பதிவு செய்து 10 ஆண்டுகள், 15 ஆண்டுகள் என தொடர்ந்து பணியாற்றி வரும் மூத்த பத்திரிக்கையாளர்கள் மற்றும் செய்தியாளர்களுக்கு தங்களுடைய ஆட்சியில் மீண்டும் ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்தித் தரும் வகையில் அவர்களுடைய இணைய தள பத்திரிக்கைக்கு தமிழக அரசு அங்கீகாரம் வழங்கி சிறப்பு செய்ய வேண்டும் என தமிழக முதல்வரான உங்களை அன்புடன் வேண்டி கேட்டுக்கொள்கிறேன்…
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இணையதளத்தில் பணிபுரியும் செய்தியாளர்களுக்கு அதன் மாநிலங்கள் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. தாங்கள் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பத்திரிக்கையாளர்களுக்கு என தனி கவனம் செலுத்தி வருவது தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் யூனியன் சார்பாக எங்களுடைய மனமார்ந்த நன்றியை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த இணையதள பத்திரிகைக்கு முக்கியத்துவம் கொடுத்து, தமிழக அரசு அங்கீகாரம் வழங்க வேண்டும் என சிரஞ்சீவி அனீஸ் பத்திரிக்கைச் செய்தி வழியாகவும், மற்றும் முதல்வர் தனிப்பிரிவுக்கும் கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி ராகுல் தமிழ்மலர் மின்னிதழ்.