இந்தியா கொரோனா பரவலில் முதல் இடத்தில் கேரளா
திருவனந்தபுரம்: இந்தியாவில் கொரோனா 2வது அலைக்கு பின்னர் பெரும்பாலான மாநிலங்களில் தொற்று பரவல் குறைந்துவிட்டது. ஆனால் கேரளாவில் நோய் பரவல் இன்னும் குறையவில்லை. கடந்த சில மாதங்களாக நோயாளிகளின் எண்ணிக்கை சராசரியாக 5000க்கு மேல் உள்ளது. தொற்று சதவீதம் சராசரியாக 9க்கு மேல் உள்ளது. மரண எண்ணிக்கையும் குறையவில்லை. கடந்த 3 மாதங்களில் இந்தியாவிலேயே கேரளாவில் தான் கொரோனா ேநாயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. நாட்டில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 98416 ஆக இருந்தது. இதில் 40730 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள்.
ஒரே நாளில் மட்டும் 3227 பேருக்கு நோய் பரவியது. 30 பேர் மரணமடைந்தனர். நேற்று வரை கேரளாவில் மரணமடைந்தவர்கள் எணிக்கை 41768 ஆகும். நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ள மாநிலங்களில் பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு உத்தரவிட்டு உள்ளது. ஆனால் கேரளாவில் பரிசோதனை மிகவும் குறைவாகவே நடைபெறுகிறது. நேற்று 45 ஆயிரத்து 412 பேருக்கு மட்டுமே பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
செய்தியளர் சையது தமிழ்மலர் மின்னிதழ்