பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம்..
கொடைக்கானல் டிசம்பர் 8. கொடைக்கானலில் தனியார் தங்கும் விடுதியில் இருந்து வரும் சாக்கடை நீரினால் பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம்; கொடைக்கானல் எம்எம் தெருவிலிருந்து மலர்ந்த ரோஜா மக்கள் குடியிருப்புக்கு செல்லும் பாதையில் (கிளவுட் கார்டன்) என்னும் தனியாருக்கு சொந்தமான விடுதிகள் உள்ளன அவற்றிலிருந்து சாக்கடை நீர் வெளியேறி பொதுமக்கள் பயன்படுத்தும் சாலையில் ஓடுகின்றது சிலவகை அசுத்தமான பொருட்களும் துர்நாற்றமும் வீசி வருகிறது விடுதி பொறுப்பாளர்களிடம் பலமுறை எடுத்துக் கூறியும் எந்த பயனும் இல்லை எனவே இதனை உடனே கொடைக்கானல் நகராட்சி ஆணையர் அவர்கள் அந்த தனியார் விடுதியில் மேல் விசாரணை செய்யப்படுமா என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்
செய்தி ரமேஷ் கொடைக்கானல்