விபத்தில் தொழிலாளி பலி.

விபத்தில் தொழிலாளி பலி இழப்பீடு கோரி பாதிக்கபட்டவரின் உறவினர்கள்
சாலை மறியல்? திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த குளித்தலை சாலை கலிங்கபட்டி அருகே உள்ள தனியார் பஞ்சாலை தொழிலாளியாக இருந்தவர் கே. உடையாப்பட்டி உடையாப்பட்டியை சேர்ந்த வெள்ளைசாமி மகன் சக்திவேல்(36) இவர் பஞ்சாலை உயர் அதிகாரியின் ஒருவர் வீட்டில் வேலை செய்த சக்திவேல் பைக்கில் ஆலைக்கு திரும்பும் போது மினி பேருந்து மோதியதில் படுகாயம் அடைந்த சக்திவேல் அரசு மருத்துவமணையில் சேர்க்கப்பட்டவர் சிகிட்சை பலனின்றி உயிர் இழந்தார் இந்நிலையில் இதுகுறித்து ஆலை நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் ஆத்திரமடைந்த சக்திவேல் மனைவி குழந்தைகள் மற்றும் உறவினர்கள் ஊர் மக்கள் ஆகியோர் பஞ்சாலையை முற்றுகையிட்டும் குளித்தலை சாலையில் மறியலும் செய்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மணப்பாறை காவல் ஆய்வாளர் திரு .கருணாகரன் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆரோக்கியசாமி ஆகியோர் நடத்திய பேச்சு வார்த்தையில் ஆலை நிர்வாகம் இழப்பீடாக சக்திவேல் குடும்பத்திற்கு ரூ 5 லட்சதுக்கான காசோலையை வழங்கியது. இதையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது,

P.பாலு மணப்பாறை செய்தியாளர்

Leave a Reply

Your email address will not be published.