தேனிசைத் தென்றல் தேவாவின் பிறந்தநாளை சமூக தொண்டு நிறுவனத்தினர் கொண்டாடி மகிழ்ந்தனர்..
தெவிட்டாத தேனிசைத் தென்றல் தேவா
இசை வேந்தன் தேனிசைத் தென்றல் தேவா அவர்களுக்கு இன்று பிறந்த நாள். தனது பிறந்தநாளை குடும்பத்தார், நண்பர்கள், உற்றார் உறவினர்களோடு இன்று கொண்டாடினார்.
வெறும் கொண்டாட்டம் என்று நிறுத்திக்கொள்ளாமல், இந்த நாளினை ஒரு அர்த்தமுள்ள நாளாக்கிட மதுரை திருப்பரங்குன்றம் திருநகரில் இயங்கி வரும் ( RS )ரவிந்திரநாத் சுகந்தி சாரிட்டபிள் டிரஸ்ட்ல் இருக்கின்ற முதியோர்களுக்கு உணவு வழங்கியுள்ளார். இந்த அறக்கட்டளையுடன் இணைந்து தனது பிறந்தநாளுக்கு உணவு ,உடை, இனிப்புகள் வழங்கி மகிழ்ந்துள்ளார்.
கலைமாமணி தேவா அவர்கள் 20.11.1950ல் சொக்கலிங்கம் -கிருஷ்ணவேணி தம்பதியினருக்கு மகனாக பிறந்தார். சிறுவயதிலிருந்தே தனது இசை பயணத்தை துவங்கி மிகக் கடினமாக உழைத்து, புகழின் உச்சிக்கு சென்றவர். திரையுலகில் தனக்கென தனி இடம் பிடித்தவர் தேவா. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமலஹாசன் விஜயகாந்த், விஜய், அஜித் போன்ற பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கு இசை அமைத்து தனது பாடலினால் அவர்களது படங்களையும் முன்னணிக்கு கொண்டு வரச் செய்தவர்.
கலைமாமணி விருது உள்ளிட்ட பல விருதுகளையும், பல பட்டங்களையும், பரிசுகளையும் பெற்ற புகழ் மிக்கவர். கலைமாமணி தேவா அவர்களின் இசை வாழ்க்கை பற்றி நாம் அறிந்திருந்தாலும் அவரின் மறு பக்கம் யாரும் அறியாததே . ஆம், அவர் ஏழை மக்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறார். அதுவும் இன்று பிறந்தநாள் காணும் வேளையில் கொரோனா பாதிப்பிலும், மழையின் பாதிப்பிலும் பலபேர் உணவுக்கு சிரமப்பட்டு வருகின்றனர் என்பதை அறிந்து தனது பிறந்தநாள் அன்று அறக்கட்டளைகளை தொடர்பு கொண்டு அவர்கள் மூலமாக நூறுக்கும் மேற்பட்டோருக்கு உணவு பொட்டலங்களும், உடைகளும் இனிப்புகளும் வழங்கி வருகின்றார்.
அனைவரும் அகமகிழ்ந்து தேவா அவர்களை பாராட்டி அவருக்கு தனது ஆசிகளை வழங்கி வருகின்றனர். தேவா அவர்கள் விளம்பரத்தை விரும்பாவிட்டாலும் அறக்கட்டளை நிர்வாகிகள் ஐயாவின் சேவை கட்டாயம் இந்த உலகுக்கு தெரிய வேண்டும் என்ற நோக்கிலும், செய்தியை வழங்க அவரிடம் அனுமதி பெற்றோம்.
தர்மம் தலைகாக்கும் உலகில் பணம், பேர், புகழ் சம்பாதித்து தனக்காக மட்டும் வாழ்பவர்கள் மத்தியில் அனைத்தும் பெற்றிருந்தாலும் மக்களுக்காகவும், தனது சேவையை செய்து வரும் இசை வேத சித்தர் தேவா அவர்களின் புகழ் ஓங்கட்டும் .
அந்த தெவிட்டாத தேனிசை தென்றலுக்கு மதுரை RS அறக்கட்டளை சார்பிலும், சென்னை ஆசை மீடியா சார்பிலும் , திருப்பரங்குன்றம் மக்கள் சார்பிலும் பிறந்தநாள் வாழ்த்துக்களை அவருக்கு அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
செய்தி சிரஞ்சீவி அனீஸ் ஆசிரியர் தமிழ்மலர் மின்னிதழ்.