பெட்ரோல் லிட்டருக்கு 103.92 ரூபாய், டீசல் லிட்டருக்கு 99.92 ரூபாய்

சென்னையில் இன்று (அக்.,22), பெட்ரோல் லிட்டருக்கு 103.92 ரூபாய், டீசல் லிட்டருக்கு 99.92 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பை அடுத்து, பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு அமலுக்கு வந்தது.
சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டர் ரூ.103.61 ஆகவும், டீசல் லிட்டர் ரூ.99.59 ஆகவும் விற்பனையானது. இந்நிலையில் இன்று பெட்ரோல் விலை, லிட்டருக்கு 31 பைசா அதிகரித்து, ரூ.103.92 ஆகவும், டீசல் விலை, லிட்டருக்கு 33 பைசா அதிகரித்து, ரூ.99.92 ஆகவும் விற்பனையாகிறது. இந்த விலை உயர்வு இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

செய்தியளர். சையது தமிழ் மலர் மின்னிதழ்

Leave a Reply

Your email address will not be published.