வீட்டின்மேல் கோட்டை சுவர் இடிந்து விழுந்தது..
கொடைக்கானல் அக்டோபர் 21: கொடைக்கானல் நகராட்சிக்கு உட்பட்ட இந்திரா நகர் பகுதியில் நேற்று நள்ளிரவு சுமார் 3 மணி அளவில் கொண்டை காரர் ,என்பவர் வீட்டின்மேல் கோட்டை சுவர் இடிந்து விழுந்தது வீட்டில் உறங்கி கொண்டு இருந்தவர்கள் திடீரென்று விழித்துக் கொண்டதனால் நான்கு பேர் உயிர் தப்பித்து வெளியே வந்துவிட்டனர் இந்த சுவர் கடந்த அதிமுக ஆட்சியில் நகராட்சி டெண்டர் மூலம் கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது எனவே இதுபோன்ற தரமற்ற சுவர்களை பொது மக்கள் குடியிருப்பு பகுதியில் கட்ட வேண்டாம் என்பது பொதுமக்களின் கருத்து இதனைத் தொடர்ந்து உடனே இடிந்து விழுந்த சுவர் மற்றும் வீட்டினை நகராட்சி மூலம் சீர் செய்து தருமாறு கொடைக்கானல் இந்திரா நகர பொதுமக்களின் வேண்டுகோளாக இருக்கின்றது..
செய்தி ரமேஷ் கொடைக்கானல்