தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 அதிகரித்துள்ளது..

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 அதிகரித்துள்ளது. தினந்தோறும் தங்கம் விலை ஒரு நிலையான நிலையில் இல்லாமல் ஏற்றம், இறக்கத்துடன் கண்ணாமூச்சி ஆடி வருகிறது. ரூ.35 ஆயிரத்துக்கு மேல் விற்பனையான தங்கம் விலை திடீரென 35 ஆயிரத்திற்கும் கீழ் சென்றது. பின்னர் படிப்படியாக உயர்வை கண்டு 35 ஆயிரத்திற்கு மேல் அதிகரிக்க தொடங்கியது. இந்த அக்டோபர் மாதத் தொடக்கத்தில் தங்கத்தின் விலை தொடர்ச்சியாக உயர்ந்தும் வந்தது. இடைப்பட்ட காலத்தில் குறைய தொடங்கியிருந்தாலும் அடுத்து வந்த நாட்களில் ஓரளவுக்கு உயர்வை கண்டது. இதனால் வாடிக்கையாளர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலம் என்பதால் தங்கம் வாங்க மக்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் அதிகரித்திருப்பது நகை பிரியர்களை சற்று கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. சென்னையில், நேற்று ஒரு சவரன் 35,752 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ஒரு சவரன் 35,872 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒருகிராம் 4,484 ரூபாய்க்குவிற்பனை ஆகிறது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.4,469 ஆக இருந்தது. இதேபோல் வெள்ளி விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.71.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

செய்தி நந்தகுமார் திருப்பூர்

Leave a Reply

Your email address will not be published.