சட்டவிழிப்புணர்வு அளிக்கும் நடமாடும் வாகனம்..
நடமாடும் வாகனம் மூலம் சட்ட விழிப்புணர்வு நடமாடும் வாகனத்தை தொடங்கி வைத்த மணப்பாறை சட்ட பணிகள் குழு தலைவரும் சார்பு நீதிபதியுமனா நீதிபதி ஜி.மணிகண்டராஜா
மணப்பாறையில் இலவச சட்ட உதவி குறித்த விழிப்புணர்வு நடமாடும் வாகனம் தொடங்கி வைக்கபட்டது. தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணையக்குழு வழிகாட்டுதலுடன் நாட்டின் 75 வது ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக மணப்பாறை வையம்பட்டி மற்றும் மருங்காபுரி பகுதிகளில் சட்டவிழிப்புணர்வு அளிக்கும் நடமாடும் வாகனத்தை மணப்பாறை வட்ட சட்டப்பணிகள் குழுதலைவரும் சார்புநீதிபதியுமான நீதிபதி ஜி.மணிகண்டராஜா தொடங்கி வைத்தார், இதையடுத்து மணப்பாறை கோவில்பட்டி சாலை, பேருந்து நிலையம் வையம்பட்டி இளங்காகுறிச்சி புத்தாநத்தம் துவரங்குறிச்சி கல்லாமேடு வளநாடு கைகாட்டி கோவில்பட்டி ஆகிய பகுதிகளில் பொதுமக்களிடம் இலவச சட்ட உதவிகள் குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது,
P.பாலு மணப்பாறை செய்தியாளர்