பல்வேறு இடங்களில் பரவலான கனமழை பெய்தது
மடத்துக்குளம் கனமழையால் பாதிக்கும் அறுவடைப் பணிகள் மடத்துக்குளம் பகுதியில் தற்போது நேற்று திடீரென மதியம் நள்ளிரவு வரை பல்வேறு இடங்களில் பரவலான கனமழை பெய்தது இதன்காரணமாக மடத்துக்குளம் பகுதியில் கடத்தூர் கணியூர் வேடப்பட்டி சோழமாதேவி ஆகிய பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் மழை நீர் தேங்கி நிற்கிறது இதனால் அறுவடை எந்திரங்களைக் கொண்டு அறுவடை பணிகள் மேற்கொள்வதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது பணியாளர்கள் பற்றாக்குறையும் அதிகளவில் உள்ளன இதனால் விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர் ஆசை மீடியா தமிழ் மலர் மின் இதழ் செய்திகள் திருப்பூர் மாவட்ட முதன்மைச் செய்தியாளர் பாக்கியராஜ்