சுயேச்சையாக 2021 உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் முன்னாள் தலைவர் மா.ஞானமணி

சுயேச்சையாக 2021 உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் முன்னாள் தலைவர்
மா.ஞானமணி

செங்கல்பட்டு மாவட்டம் பொழிச்சலூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு சுயேச்சையாக போட்டியிடும் தமிழ் நாடு இளைஞர்&மகளிர் மக்கள் நல முன்னேற்ற சங்கம் நிறுவன தலைவர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் திரு/ மா.ஞானமணி அவர்களை மரியாதை நிமிர்தமாக பொழிச்சலூர் இளைஞர் மக்கள் நல முன்னேற்ற சங்கம் அணி தலைவர் திரு/ ராதா கிருஷ்ணன் ஆதரவு கொடுத்து மாலை அணிவித்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் பொழிச்சலூர் ஊராட்சி கிராமத்தில் பூர்வீகமாக குடியிருந்து வரும் திரு/
மா.ஞானமணி மறைந்த திமுக முன்னாள் முதலமைச்சர் கலைஞருடைய ஆட்சியிலும் பணியாற்றி அதன் தொடர்ச்சியாக 1986 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ஊராட்சி மன்றத்தின் உறுப்பினராக நேராக தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் சேவையில் ஈடுபட்டார்.
கலைஞர் முதல்வராக இருந்த போது பொழிச்சலூர் மக்களுக்காக தனது பலவேறு நலதிட்டம் கொண்டு வந்தார். அதன்பிறகு 1996,2001,2011,ஆம் ஆண்டு வரை ஊராட்சி மன்றத்தின் 25 வருட காலம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஊராட்சி மன்ற தலைவர் பொறுப்பில் இருந்து பொழிச்சலூர் கிராம மக்களுக்கு பணியாற்றி வந்தார். இதை தொடர்ந்து நடைபெறும் 2021- ஆம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் ஊராட்சி மன்ற தலைவராக சுயேச்சையாக களம் இறங்கி உள்ளார். ஊராட்சி மன்ற தலைவராக வாய்ப்பு தருவதன் மூலம் 2010- ல் கொண்டு வந்த பல்வேறு கிடப்பில் உள்ள திட்டங்கள் பொழிச்சலூர் பொதுமக்களுக்காக சென்று சேரும் வகையில் திட்டப்பணிகள் பாதாள சாக்கடை,
மழைநீர் வடிகால்,மற்றும் குடிநீர் சீரமைக்கவும் விடுபட்ட பணிகளை மீண்டும் செய்து தர அடையாறு ஆற்றில் ஓடும் கழிவுகளை சுத்தம் செய்வதற்கு வாக்குறுதிகளை அளித்துள்ளேன். என்று பொது மக்களுக்கு மா.ஞானமணி வாக்குறுதி அளித்தார்.
செய்தி: S.ரவூப்

Leave a Reply

Your email address will not be published.