தமிழகத்தின் பல்வேறு இடங்களில் விடிய விடிய கனமழை.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் விடிய விடிய கனமழை. சென்னையில் கிண்டி, வடபழனி, கோயம்பேடு, எழும்பூர், மயிலாப்பூர், அடையாறு, திருவான்மியூர், வேளச்சேரி, போரூரில் கனமழை பெய்தது.பல்லாவரம், அனகாபுத்தூர், தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்தது. திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.