மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம்

மக்களுடைய பிரச்னைகளை மாவட்ட அளவிலேயே தீர்த்துவைக்க மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாவட்ட அளவில் பிரச்னைகளை தீர்க்காத காரணத்தினால் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு நாள் ஒன்றுக்கு 10,000 க்கும் மேலான மனுக்கள் குவிகின்றன.மாவட்ட அளவில் மனு அளித்து பொறுத்து பார்த்து குக் கிராமங்களில் இருந்து கோட்டையை நோக்கி புறப்படுகின்றனர்.பொதுமக்கள் கனவுகள் நிறைந்த கண்களோடும், கவலைகள் நிறைந்த இதயத்தோடும், அவர்கள் காத்திருப்பதை பார்க்கும் போது மனம் கனக்கிறது. அதிக மனுக்களை தீர்த்து வைக்கும் மாவட்ட ஆட்சியர்களுக்கு கேடயம் வழங்குவதை விட குறைவான மனுக்கள் எந்த மாவட்டத்திலிருந்து வருகிறதோ அவர்களுக்கு கேடயம் அளிக்கும் நடைமுறையை கொண்டு வரும் அளவுக்கு உங்கள் பணி இருக்க வேண்டும் – தலைமைச் செயலாளர் இறையன்பு
செய்தியளர். சையது தமிழ் மலர் மின்னிதழ்

Leave a Reply

Your email address will not be published.