2022 உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தல்: காங்கிரஸ் கட்சியின் அதிரடி ஆக்‌ஷன் பிளான்!

எதிர்வரும் 2022 உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலை காங்கிரஸ் கட்சி, அதன் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தலைமையின் கீழ் யாருடனும் கூட்டணி சேராமல் தனியாகவே சந்திக்க உள்ளதாக மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பெரிய மாநிலமாக விளங்குவது உத்தரப்பிரதேசம், இங்கு ஆட்சியை பிடிக்கும் கட்சி 2024 நாடாளுமன்ற தேர்தலை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள வாய்ப்பாக அமையும். கடந்த 2017 உ.பி சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. அதே நேரத்தில் இந்திரா நேரு குடும்பத்தினரின் பாரம்பரிய தொகுதிகள் இந்த மாநிலத்தில் தான் இருக்கின்றன என்ற போதிலும் கூட கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி மோசமான தோல்வியை அடைந்தது. மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெறும் 7 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

இதனிடையே எதிர்வரும் 2022 உ.பி சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள அதிரடி ஆக்‌ஷன் பிளான் ஒன்றை காங்கிரஸ் கட்சி கையில் எடுத்துள்ளது. முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சல்மான் குர்ஷித் இது குறித்து கூறுகையில், உத்தரப்பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தலை பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி தனித்து எதிர்கொள்ளும் என்றும் எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்க மாட்டோம் எனவும் தெரிவித்தார்.

அதே நேரத்தில் முதலமைச்சர் வேட்பாளர் குறித்து இன்னமும் முடிவு எடுக்கப்படவில்லை என்றும் அது குறித்து பின்னர் முடிவெடுத்து அறிவிக்கப்படும் எனவும் சல்மான் குர்ஷித் தெரிவித்தார். மேலும் பொதுமக்களின் குரலாக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இருக்கும் எனவும் அவர் கூறினார்.

Also Read: தாலிபான்களால் தலைமறைவாக வாழும் 200 பெண் நீதிபதிகள்!

நாங்கள் பிரியங்கா காந்தி தலைமையில் தனியாக தேர்தலை எதிர்கொள்வோம், பிரியங்கா தனது தலைமையில் வெற்றியை உறுதி செய்ய தீவிரமாகவும், கடினமாகவும் பணியாற்றி வருகிறார். உத்தரப்பிரதேசத்தின் 403 சட்டமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை நிறுத்தும்.

பிரியங்கா காந்தி

உறுதியான நம்பிக்கையுடன் இந்த தேர்தலை எதிர்கொள்வோம். கட்சித் தொண்டர்கள் ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று அங்குள்ள மக்கள் சந்தித்து வரும் பிரச்னைகளை அறிந்து கொள்வார்கள் என சல்மான் கூறினார்.

Also Read: வோடபோன் ஐடியா நிறுவனத்தின் சிம் மோசடியால் ₹68 லட்சத்தை இழந்த வாடிக்கையாளர்!

இதனிடையே பிரியங்கா காந்தி கடந்த வியாழன்று உத்தரப்பிரதேசத்துக்கு மூன்று நாள் பயணமாக சென்றுள்ளார். காங்கிரஸ் கட்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த தேர்தலை எதிர்கொள்ள கட்சி எடுத்து வரும் நடவடிக்கைகளை அவர் ஆய்வு செய்தார்.

ஆக்ரா, கோரக்பூர், அயோத்தி, ஜான்ஸி போன்ற பகுதிகளுக்கு சென்ற சல்மான் குர்ஷித் அங்கு மக்களின் குறைகளை கேட்டறிந்தார். மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு அளிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இருக்கும் எனவும், அது காங்கிரஸின் தேர்தல் அறிக்கையாக இல்லாமல் மக்களின் தேர்தல் அறிக்கையாகவே இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published.