ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி: பாகிஸ்தானியர்கள் மகிழ்ச்சி!
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியிருப்பதில் பெரும்பாலான பாகிஸ்தானியர்கள் மகிழ்ச்சி அடைந்திருப்பதாக இருப்பதாக தெரியவந்துள்ளது.
அமெரிக்க படைகள் வெளியேற்றத்தை அடுத்து உத்வேகத்தை இழந்த ஆப்கன் அரசுப் படைகள் பின் வாங்கிய நிலையில் தாலிபான்களின் கை ஓங்கியது. ஒவ்வொரு மாகாண தலைநகராக கைப்பற்றி வந்த தாலிபான்கள் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி காபுலை கைப்பற்றி ஒட்டுமொத்த ஆப்கனையும் கையகப்படுத்தியுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து ஆப்கானில் புதிய இடைக்கால ஆட்சியையும் தாலிபான்கள் நிறுவியுள்ளனர். அதே நேரத்தில் தாலிபான் அரசை அங்கீகரிப்பதில் சர்வதேச நாடுகள் தயக்கம் காட்டி வருவதுடன் இன்னமும் தெளிவான முடிவை எடுக்க முடியாமல் உள்ளனர்.
இதனிடையே சமீபத்தில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்புகளின்படி, ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி அமைத்திருப்பதற்கு பெரும்பாலான பாகிஸ்தானியர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
Also Read: வோடபோன் ஐடியா நிறுவனத்தின் சிம் மோசடியால் ₹68 லட்சத்தை இழந்த வாடிக்கையாளர்!
Gallup Pakistan என்ற அமைப்பினால் எடுக்கப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில் 55% சதவிகித பாகிஸ்தானியர்கள் தாலிபான் ஆட்சிக்கு ஆதரவை தெரிவித்துள்ளனர். 25% பாகிஸ்தானியர்கள் மட்டுமே தாலிபான் ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குறிப்பாக பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தைச் சேர்ந்த 65% பேர் தாலிபான்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 13 முதல் செப்டம்பர் 5ம் தேதி வரையில் சுமார் 2500 பாகிஸ்தானியர்களிடையே இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.
Also Read: 10 வயது மகனை கொலை செய்த தந்தை: சடலத்தை அப்புறப்படுத்த உதவிய மனைவி – காதலி!
கருத்துக்கணிப்பில் கலந்து கொண்டோரின் மொத்தம் 58% ஆண்களும், 36% பெண்களும் ஆப்கனில் தாலிபான்கள் ஆட்சியால் மகிழ்ச்சியடைந்திருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் நகர்ப்புறங்களில் வசிப்போர் 58% தாலிபான்களுக்கு ஆதரவாக இருக்கின்றனர்.
ஆப்கனில் மக்களாட்சியை நீக்கிவிட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியிருக்கும் தாலிபான்கள், கடந்த 1996 முதல் 2001 வரை கொடுங்கோன்மை ஆட்சி நடத்தியதால் ஆப்கன் மக்களின் வெறுப்பை சம்பாதித்துள்ளனர். குறிப்பாக பெண்கள் உரிமை தாலிபான் ஆட்சியில் நசுக்கப்பட்டிருக்கிறது. பெண்களை குறிவைத்து தற்போது தாக்குதல்களும், கொலைகளும் ஆப்கனில் அதிகரித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.