அதே உற்சாகம் -கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய வடிவேலு: வைரலாகும் புகைப்படம்
நகைச்சுவை நடிகர் வடிவேலு தனது பிறந்தநாளை நாய்சேகர் திரைப்படத்தின் இயக்குனர் சுராஜூடன் கேக் வெட்டி கொண்டாடினார். இது தொடர்பானபுகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.
வைகை புயல் என்றும் நகைச்சுவை மன்னன் என்று ரசிகர்களால் அழைக்கப்படுவர் நடிகர் வடிவேலு. அரசியல் நிலைபாடு, இயக்குநர் ஷங்கருடனான மோதல்போக்கு, கால்சீட் பிரச்சனை போன்றவை காரணமாக நீண்ட காலமாக திரைப்படங்களில் நடிக்க முடியாமல் வடிவேலு சிரமப்பட்டு வந்தார்.
இந்நிலையில், அவருக்கு விதிக்கப்பட்டிருந்த ரெட் கார்டு அண்மையில் திரும்பபெறபட்டது. இதையடுத்து, புது உற்சாகத்தில் மீண்டும் திரைப்பிரவேசத்துக்கு வடிவேலு தயாராகி வருகிறார். சுராஜ் இயக்கத்தில் லக்கா தயாரிப்பில் தயாராகும் நாய்சேகர் திரைப்படத்தில் வடிவேலு நடிக்கவுள்ளார். இது தொடர்பாக அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த வடிவேலு, தனக்கு எண்ட் கார்டு கிடையாது என்றும் உற்சாகமாக பதிலளித்தார்.
வடிவேலுவின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, சமூக வலைதளங்களில் வடிவேலுவின் நிகைச்சுவை காட்சிகள், மீம்ஸ் ஆகியவை மூலம் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். #HBDVadivelu என்ற ஹேஷ்டேக் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் உள்ளது.
இந்நிலையில், தனது 61வது பிறந்தநாளை நாய்சேகர் திரைப்படத்தின் இயக்குநர் சுராஜ் உடன் கேக்வெட்டி நடிகர் வடிவேலு கொண்டாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்திலும் வடிவேலு பகிர்ந்துள்ளார்.