கொரோனா தடுப்பூசி போடாதவர்கள்தான் ஐ.சி.யூவில் உள்ளனர் – ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் விளக்கம்

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களின் ஆய்வில் முதல் கட்ட தரவுகள் வெளியாகியுள்ளன. அதில் தற்போது ஐ சியூவில் இருக்கும் நோயாளிகள் ஒருவர் கூட தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என்பது தெரியவந்துள்ளது.

மூன்று மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வரும் ஆய்வில் தற்போது வரை 970 நோயாளிகளின் விபரங்கள் திரட்டப்பட்டுள்ளன. இதில் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் 72 நோயாளிகளின் விபரங்களை மருத்துவமனை குழு ஆய்வு செய்தததில் ஐ.சி.யு நோயாளிகள் ஒருவர் கூட தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என்பது தெரியவந்துள்ளது.

எனவே தடுப்பூசி தான் உயிரை காப்பாற்றும் என்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது என ராஜீவ் காந்தி அரசு மருத்துவனனையின் முதல்வர் தேரணிராஜன் கூறுகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுகுறித்து நமக்கு அளித்த பேட்டியில், ‘உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்ட 970 பேரில் 170 பேர் தான் ஒரு டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர். இரண்டு டோஸ் போட்டவர்கள் மிக குறைவு.
தற்போது 72 நோயாளிகள் உள்ளனர். இதில் 17 பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுள்ளனர். ஐ சி யு வில் 11 பேர் உள்ளனர். அதில் ஒருவர் கூட ஒரு டோஸ் தடுப்பூசி கூட போடவில்லை. எனவே தடுப்பூசி தான் உயிரை காக்கும் என்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது’ என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.