காற்றால் அரிக்கப்பட்ட செவ்வாய் கிரகத்தின் நிலப்பரப்பு – நாசா வெளியிட்ட கண்கவர் புகைப்படங்கள்!
நாசாவின் செவ்வாய் கிரக கண்காணிப்பு ஆர்பிட்டர் அதன் சுற்றுப்பாதையில் இருந்து சிவப்பு கிரகத்தை கண்காணித்து வருகிறது. இந்த ஆர்பிட்டர் ஒவ்வொரு முறையும் கிரகத்தில் உள்ள பள்ளங்கள், குன்றுகள், பனிக்கட்டிகள் மற்றும் பிற நிகழ்வுகள் எப்படி இருக்கும் என்பது தொடர்பாக படங்களை நாசா-வுக்கு அனுப்பி வருகிறது. நாசாவும் அதனை தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டா அல்லது ட்விட்டர் பக்கத்தில் அவ்வப்போது வெளியிட்டு நெட்டிசன்களை பிரமிக்க வைக்கும். இந்த நிலையில் இந்த ஆர்பிட்டர் சமீபத்தில் ஒரு புகைப்படத்தை நாசாவுக்கு அனுப்பியுள்ளது. காற்று காரணமாக அரிப்புக்கு உள்ளான செவ்வாய் பாறைகளின் அந்த அழகிய படங்களை ஆர்பிட்டர் அனுப்பியுள்ளது.
செப்டம்பர் 5ம் தேதி தனது அதிகாரப்பூரவ இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இந்த மா’அதிம் வாலிஸ் அவுட்ப்ளோ சேனலின் அழகான படங்களை நாசா பகிர்ந்து கொண்டது. ஒரு காலத்தில் இந்த பகுதி செவ்வாய் கிரகத்தின் ஏரிகளில் இருந்து தண்ணீர் வெளியேறிய பெரிய பகுதி என்று கூறப்படுகிறது. அவுட்ப்ளோ சேனலில் உள்ள அழகான வடிவங்கள் காற்றால் உருவானவை ஆகும். இதன் மூலம் செவ்வாய் கிரகத்தில் காற்று, அரிக்கும் சக்தியை எந்தளவுக்கு வெளிப்படுத்தி வருகிறது என்பதை புரிந்துகொள்ளலாம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
நில அரிப்பைப் பற்றி பேசும்போது நாம் வழக்கமாக ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயத்தை நாசா இதில் குறிப்பிட்டுள்ளது. அதாவது நாசாவின் கூற்றுப்படி, “நீர் மற்றும் எரிமலை ஒரு நிலப்பரப்பில் தங்கள் அடையாளங்களை விட்டுச் செல்வது போல், காற்றும் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் அரிக்கும் சக்தியை செவ்வாய் கிரகத்தின் நிலப்பரப்பில் விட்டுச் செல்கின்றன” என விளக்கியுள்ளது. மார்ஸ் ஆர்பிட்டரின் சக்திவாய்ந்த உயர்-தெளிவுத்திறன் இமேஜிங் அறிவியல் பரிசோதனை (HiRISE) கேமராவைப் பயன்படுத்தி இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. படத்தில் தெரியும் அந்த அவுட்ப்ளோ சேனல் சுமார் 700 கிலோமீட்டர் நீளமானது. இது அமேசான் ஆற்றின் பத்தில் ஒரு பங்கு ஆகும். நாசாவின் படி, இந்த படங்கள் “ஒரு சிறிய ஓவியத்தை கிட்டத்தட்ட நமக்கு நினைவூட்டுகின்றன.” என்று குறிப்பிட்டுள்ளது.
Also read… என்னது வாத்து பேசுதா… ஆஸ்திரேலியாவில் வினோதம்…!
மார்ஸ் ஆர்பிட்டர் வெளியிட்ட அந்த ஒரு ஜோடி படங்கள் பரந்த, ஆழமற்ற குழிகளால் நிரப்பப்பட்ட பாறை நிலத்தின் மேற்பரப்புகளைக் காட்டுகின்றன. மேலும் அழகான வடிவத்தை உருவாக்கும் திசை கோடுகள் அதில் தெரிகின்றன. கோடுகளின் வடிவம் குறிப்பிடத்தக்க வகையில் காற்று வீசும் திசையை குறிக்கும் விதத்தில், காற்று வடிவங்களில் உறைந்திருப்பதைப் போல காணப்பட்டுள்ளன. அற்புதமான படங்களை பார்த்த, பல இன்ஸ்டாகிராம் யூசர்கள் கமெண்ட் செக்சனில் தங்கள் கருத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அதில் பலர், இது பார்ப்பதற்கு மிகவும் அற்புதமாக இருக்கிறது என்று எழுதியிருந்தனர். சிவப்பு கிரகத்தின் அழகைப் பாராட்டி, ஒரு இன்ஸ்டாகிராம் பயனர் எழுதியிருந்ததாவது, ” “செவ்வாய், நான் உன் மீது காதலில் விழப்போகிறேன்.” என்று குறிப்பிட்டிருந்தார்.