அண்ணாத்த’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது.. வேட்டி சட்டையில் மாஸ் காட்டும் ரஜினிகாந்த்!!
தர்பார்’ படத்தைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் தற்போது ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். படத்தை இயக்குநர் சிவா இயக்குகிறார். இதில் நயன்தாரா நாயகியாகவும், கீர்த்தி சுரேஷ் ரஜினியின் தங்கையாகவும் நடிப்பதாகக் கூறப்படுகிறது.
இவர்களுடன் முக்கியக் கதாபாத்திரங்களில் குஷ்பு, மீனா, பிரகாஷ்ராஜ், லிவிங்ஸ்டன், ஜார்ஜ் மரியன், சதீஷ், சூரி நடிக்கிறார்கள். அண்ணாத்த படத்தில் வில்லனாக நடிப்பவர் ஜெகபதி பாபு. படத்திற்கு இசை டி.இமான். இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத், சென்னை, லக்னோ, கொல்கத்தா பகுதிகளில் நடந்து முடிந்தது.
சிவா இயக்கத்தில் வெளியான வீரம், விஸ்வாசம் போன்று கூட்டு குடும்பப் பின்னணியில் அண்ணாத்த தயாராகிறது. அண்ணன் – தங்கை பாசம் படத்தில் பிரதானமாக இருக்கும் என்கிறது படக்குழு. நவம்பர் 4 ந்தேதி தீபாவளி அன்று அண்ணாத்த படம் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் தற்போது முழு வீச்சில் நடந்து வருகின்றன.
இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் இன்று வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, காலை 11 மணிக்கு பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அதில், ரஜினிகாந்த் வேட்டி சட்டையில் கண்ணாடியுடன் மாஸாக இருக்கிறார்.