டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதியம் உயர்வு – சட்டப்பேரவையில் அறிவிப்பு
தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கையின் போது பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் விற்பனை பணியாளர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வருகிறார்கள். அவர்களுக்கு மாத தொகுப்பூதியம் 500 ரூபாய் கூடுதலாக ஏப்ரல் 2021 முதல் உயர்த்தி வழங்கப்படும். இதன் மூலம் 25,000 ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.