சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கலைஞர் பெயர் – சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ பரந்தாமன் கோரிக்கை
சட்டப்பேரவையில் இன்று சட்டத்துறை மற்றும் மின் துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் பேசிய எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன், சென்னை எழும்பூர் பகுதியை, 900 ஆண்டுகளுக்கு முன் வரலாற்று பதிவுகளில் குறிப்பிடப்பட்டிருப்பது போல எழுமூர்(EZHUMOOR) என பெயர் மாற்றம் செய்ய வேண்டும், என்றார்.
இந்தியாவின் 8 மாநிலங்களில் உள்ளது போன்று, தமிழகத்திலும் மத்திய புலனாய்வுப் பிரிவான சிபிஐ, மாநில அரசை கலந்தாலோசிக்காமல் விசாரணை நடத்தக் கூடாது என்ற தீர்மானத்தை சட்டப் பேரவையில் கொண்டுவர வேண்டும் என தெரிவித்தார்.