சென்னையின் பிரபல மருத்துவமனைக் குழும விளம்பர தூதரானார் தோனி!!!

தமிழ்நாட்டின் பிரபல காவேரி மருத்துவமனை குழுமத்தின் பிராண்ட் அம்பாசடராக, அதாவது விளம்பரத் தூதராக முன்னாள் இந்திய கேப்டனும் நடப்பு சிஎஸ்கே அணியின் கேப்டனுமான எம்.எஸ்.தோனி நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டின் பிரபல காவேரி மருத்துவமனை குழுமத்தின் பிராண்ட் அம்பாசடராக, அதாவது விளம்பரத் தூதராக முன்னாள் இந்திய கேப்டனும் நடப்பு சிஎஸ்கே அணியின் கேப்டனுமான எம்.எஸ்.தோனி நியமிக்கப்பட்டுள்ளார்.

அதாவது காவேரி மருத்துவமனையின் வளர்ச்சியும் தோனியின் வளர்ச்சியும் ஒன்று போன்றதே என்கிறது காவேரி நிர்வாகம்.

“காவேரி மருத்துவமனையைப் போல் தோனியும் சிறிய டவுனிலிருந்து வந்து பெரிய உச்சத்தைத் தொட்டவர், திருச்சியில் 30 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக ஆரம்பித்தோம். இப்போது 1,500 படுக்கைகள் கொண்ட, தமிழ்நாடு மற்றும் பெங்களூருவில் கிளைகள் கொண்ட மருத்துவமனை குழுமமாக வளர்ச்சியடைந்துள்ளோம்.

அனைத்துத் தரப்பு மக்களுக்கும் இயலக்கூடிய கட்டணங்களுடன் தரமான மருத்துவமே எங்கள் குறிக்கோள்” என்று காவேரி மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் மணிவண்ணன் செல்வராஜ் தெரிவித்தார்.

தோனியும் 20 ஆண்டுகளுக்கும் மேல் மருத்துவச் சேவை புரிந்து வரும் ஒரு நிறுவனத்துடன் விளம்பர தூதராக கூட்டிணைவதில் பெருமையடைகிறேன் என்றார்.

Leave a Reply

Your email address will not be published.