‘கன்னிப்பேச்சை’ ‘அறிமுகப்பேச்சாக’ – சட்டமன்றத்தில் வானதி சீனிவாசன்

சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று முதல்முறையாக சட்டப்பேரவையில் பேசும் எம்எல்ஏக்களை கன்னிப் பேச்சு என்று கூறுவர்.  

சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று முதல்முறையாக சட்டப்பேரவையில் பேசும் எம்எல்ஏக்களை கன்னிப் பேச்சு என்று கூறுவர்.  அவ்வாறு கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் கமல்ஹாசனை எதிர்த்துப் போட்டியிட்டு முதல்முறையாக எம்.எல்.ஏ வாக வெற்றி பெற்ற பாஜகவை சேர்ந்த வானதி ஸ்ரீனிவாசன் (Vanathi Srinivasan) இன்று பேசினார்.  

சட்டப்பேரவையில் இன்று பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் பேசுகையில், ” முதல் முறையாக சட்டப்பேரவையில் பேசும் உறுப்பினர்களளது பேச்சை, கன்னிப்பேச்சு என்று சொல்லாமல் முதல் பேச்சு அல்லது அறிமுக பேச்சு என்று கூறினால் நாகரிகமாக இருக்கும். கன்னி என்கின்ற வார்த்தை இளம் வயது பெண்மையை குறிக்கும் வார்த்தை,  என்னைப் பொறுத்தவரை ‘அறிமுகப்பேச்சு’ என குறிப்பிட்டால் நாகரீகமாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.  

இதற்கு முன் சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் (Udhayanidhi Stalin) தனது முதல் உரையை ஆற்றினார்.  அரியலூரில் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரிக்கு நீட் தேர்வால் உயிரிழந்த மாணவி அனிதாவின் பெயரை சூட்ட வேண்டும் என்றும், நீட் தேர்வு ரத்து என்பதை ஒரு இயக்கமாக முன்னெடுக்க வேண்டும் எனவும் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் கூறினார்.  

Leave a Reply

Your email address will not be published.