தமிழகத்தில் செப்டம்பர் 13 ஆம் தேதியில் ராஜ்யசபா தேர்தல்

தமிழகத்தில் காலியாக உள்ள 3 ராஜ்யசபா இடங்களில், ஒரு இடத்திற்கு மட்டும் செப்டம்பர் 13ல் தேர்தல் நடக்கும். அதிமுக (AIADMK) MP ஆக இருந்த முகமது ஜான் என்பவரின் மறைவுக்கு பிறகு அவரது அந்த இடம் காலியானது. மேலும் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் (TN Assembly Election) ராஜ்யசபா எம்.பி.,க்கள் கே.பி.முனுசாமி மற்றும் ஆர் வைத்தியலிங்கம் வெற்றி பெற்றனர். இதனையடுத்து அவர்கள் தங்களது எம்.பி., பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் ராஜ்யசபாவில் (Rajya Sabha) காலி இடங்கள் 3 ஆக அதிகரித்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஆகஸ்ட் 24 ஆம் தொடங்ககி ஆகஸ்ட் 31 தேதி வரை நடைபெறும். அதேசமயம் வேட்பு மனு பரிசீலனை செப்டம்பர் 1 ஆம் தேதியும், வாபஸ் பெற கடைசி நாள் செப்டம்பர் 3 எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. தேர்தல் செப்டம்பர் 13 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையிலும், முடிவுகள் அன்றைய தினம் மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.