விமானம் மூலம் ஆப்கானில் இருந்து தாயகம் திரும்பிய 129 இந்தியர்கள்
ஆப்கானிஸ்தானில் வசித்துவந்த 129 இந்தியர்கள் விமானம் மூலம் நேற்று தாயகம் திரும்பியுள்ளனர்.
ஆப்கானிஸ்தான், தாலிபான்களின் கட்டுக்குள் அதிகாரப்பூர்வமாக செல்வது உறுதியானது. சுமார், 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் மீண்டும் கைப்பற்றியுள்ளனர்.
இதற்கிடையில் ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இனிவரும் நாள்களில் ஒருவேளை ஆப்கனில் நிலைமை மோசமடையும் பட்சத்தின் ஆப்கனில் வசிக்கும் மற்ற இந்தியர்களையும் இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு நிலைமையை கவனித்து வருகிறது.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களை தாயகம் அழைத்து வருவதற்காக, ஏர் இந்தியா நிறுவனம் சிறப்பு விமானத்தை இயக்கியது. இதன்படி ஏர் இந்தியாவின் சிறப்பு விமானம் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் சென்றது. அங்கிருந்து 129 பேர்களுடன் புறப்பட்ட அந்த விமானம் டெல்லி வந்து சேர்ந்தது.