தாலிபான் பிடியில் ஆப்கானிஸ்தான்
தாலிபான் கிளர்ச்சிக் குழுவின் இணை நிறுவனர் முல்லா அப்துல் கானி பராதர் ஆப்கானிஸ்தனின் புதிய அதிபராகக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தலிபான்களின் அரசியல் தலைவரான அப்துல் கானி பராதர் 2010 இல் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டார். மூன்று வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் வேண்டுகோளின் பேரில் அவர் பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார் மற்றும் கத்தார் நாட்டிற்கு மாற்றப்பட்டார்.
தாலிபான் (Taliban) இயக்கத்தின் பிறப்பிடமான கந்தஹாரில் வளர்க்கப்பட்ட பராதர், 1980 களில் சோவியத்-ஆப்கானிஸ்தான் போரில் கந்தஹாரில் போராடி, சோவியத் ஆதரவு பெற்ற ஆப்கான் அரசுக்கு எதிராக ஆப்கான் முஜாஹிதீனில் பணியாற்றினார்.
1994 இல், அவர் தனது முன்னாள் தளபதி முகமது ஓமருக்கு தெற்கு ஆப்கானிஸ்தானில் தாலிபான் படைகளுக்கு ஆள் சேர்க்க உதவினார்.