‘ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய அமீரகம்’ என அழைக்கப்படும்
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் இடைக்கால ஆட்சியை நிறுவியுள்ளதாகவும், அதற்கு ‘ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய அமீரகம்’ என்று பெயர் மற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தாலிபான்களின் கை ஓங்கியதை அடுத்து அதிகாரத்தை அவர்களுக்கே விட்டுத்தர அதிபர் அஷ்ரப் கானி (Ashraf Ghani) ஒப்புக்கொண்டார். இதன் தொடர்ச்சியாக அவர் ஆப்கானிஸ்தானை விட்டே வெளியேறிவிட்டார். இதனையடுத்து காபூலில் உள்ள அதிபர் மாளிகை தாலிபான்களிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது.
இதனையடுத்து அங்கு தாலிபான்கள் இடைக்கால ஆட்சியை நிறுவியுள்ளதாகவும், அதற்கு இஸ்லாமிக் எமிரேட் ஆப் ஆப்கானிஸ்தான் என்று பெயர் மற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பழமைவாத தாலிபான்கள் வசம் அதிகாரம் வந்துவிட்டதால் ஆப்கானிஸ்தான் மக்களில் பலர் அச்சமடைந்து, மூட்டை முடுச்சிகளுடன் பாகிஸ்தானில் தஞ்சம் புக முற்பட்டுள்ளனர். இதற்காக பாகிஸ்தானை ஒட்டிய ஆப்கானிஸ்தான் எல்லையில் ஏராளமானோர் காத்துக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.