வரலாற்றை மறந்த சமூகம் முன்னோக்கி செல்லாது….
75 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் எமது மக்களுக்கு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்
இந்த நாட்டின் சுதந்திரத்தின் தியாகங்கள் வெகு அதிகமாக இருக்கிறது
சுதந்திரத்தை பெற்றுத்தந்த அனைத்து தியாகிகளுக்கும் இந்த நாள் நாளில் வாழ்த்துக்களை உரித்தாக்கி கொள்வதில் மிக மகிழ்ச்சி அடைகிறேன்
இந்த சுதந்திரம் பலதரப்பட்ட மக்களால் கிடைக்கப்பெற்றது
இந்த சுதந்திரத்திற்கு அனைத்து மக்களின் பங்களிப்பு இருந்திருக்கிறது
அந்தவகையில் இஸ்லாமியர்களின் வரலாற்றை முன்னோக்கி எடுத்து இளைய சமுதாயம் மக்களிடம் கொண்டு சேர்ப்பது நமது கடமையாகும்
சுதந்திரத்திற்காக இஸ்லாமிய மக்கள் ஆற்றிய பங்களிப்பு அலாதியானது
அவர்களின் பங்களிப்பு இந்த நாடு சுந்தரத்திற்கு மிக முக்கியமானதாக அமைந்தது என்று சொன்னாள் அது மிகையாகாது
உயிராலும் பொருளாதாரத்திலும் இன்னும் ஏனைய தியாகங்களை இஸ்லாமிய மக்கள் இந்த நாட்டுக்கு அர்ப்பணித்தார்கள் என்பதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன்
இந்திய வரலாற்றில் மறக்கவும் மறைக்கவும் முடியாத தியாக வரலாற்றுக்கு இஸ்லாமிய மக்கள் சொந்தக்காரர்கள்
என்னும் இந்த நாட்டுக்கு மக்களுக்கு ஒரு இடையூறு வருமேயானால் தன் உயிரையும் மாய்த்து இந்த நாட்டுக்கு இந்த நாட்டு மக்களுக்கு வழங்குவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை
இந்திய சுதந்திரத்திற்கு பாடுபட்ட நமது முன்னோர்களை அடையாளப்படுத்திக் கொண்டு இருக்க வேண்டும் காரணம் இன்றைய சூழ்ச்சிகள் அந்த வரலாற்றை மறக்கடிக்க முயற்சிக்கிறார்கள்
எவ்வளவு முயற்சி எடுத்தாலும் வரலாற்றை அளிக்க முடியாது என்பதை இந்த நாளில் அவர்களுக்கு எடுத்துக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன்
இந்த நாட்டில் இந்து முஸ்லிம் கிறிஸ்துவர்கள் இன்னும் ஏனைய மதத்தவரை பிரிக்க நினைக்கும் அந்த சூழ்ச்சி காரர்களை இந்த நாட்டை விட்டு துரத்தி அடிப்போம் என்று இந்த நாளில் உறுதி ஏற்கிறேன்.
அனைவரும் உறுதி ஏற்போம்
எஸ் கிதர் முகம்மது இந்திய தேசிய லீக் மாநில அமைப்பு செயலாளர்