மதுரை ஆதீனம் மறைவுக்கு இரங்கல்

உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் சிகிச்சை பலனின்றி காலமானார். 77 வயதான குருமகா சன்னிதானம் சிவலோக பிராப்த்தி அடைந்தார்…

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் , “ஆன்மீகப் பணியிலும் மக்கள் பணியிலும் அருந்தொண்டாற்றி அனைவரின் அன்பிற்கும் உரியவராகத் திகழ்ந்த மதுரை ஆதீனம் திரு. அருணகிரிநாதர் அவர்களின் மறைவுச்செய்தி அறிந்து துயருற்றேன். அன்னாரது மறைவால் வாடும் ஆன்மீகப் பெருமக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “ஆன்மீக பெரியவர், பக்திமான், சமூக சிந்தனையாளர், அனைத்து மதத்தவரோடும் அன்பு பாராட்டுபவர், மிகத் தொன்மையான சைவ சமய திருமடங்களில் ஒன்றான மதுரை ஆதீனத்தின் 292 ஆவது குருமகா சன்னிதானமான அருணகிரிநாதர் காலமானார் என்ற செய்தியறிந்து மனவேதனை அடைந்தேன், அவரின் இழப்பு தமிழுலகின் பேரிழப்பாகும் ”  எனக் கூறியுள்ளார். 

Leave a Reply

Your email address will not be published.