2வது டெஸ்ட் போட்டி கே.எல் ராகுல் செய்த சாதனை!
England vs India: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் இந்திய அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன் கே.எல் ராகுல் நேற்றைய போட்டியில் சதம் அடித்ததன் மூலம் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.
* கடந்த 35 ஆண்டுகளில் முதல் முறையாக இந்திய அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன்கள் இருவரும் வெளிநாட்டு மண்ணில் 75 ரன்களுக்கும் மேல் கடந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக இதுவே நான்காவது முறை.
* கே.எல் ராகுல் டெஸ்ட் போட்டியில் கடைசியாக 2018ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த போட்டியில் சதம் அடித்துள்ளார். அதன்பின் கடந்த மூன்று வருடங்களில் அடுத்த சதத்தையும் இங்கிலாந்து மண்ணிலேயே பதிவு செய்துள்ளார்.
* ஓவல் மற்றும் லாட்ஸ் மைதானங்களில் டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்த மூன்றாவது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார் கே.எல் ராகுல். இதற்கு முன் ராகுல் டிராவிட் மற்றும் ரவி சாஸ்திரி இந்த சாதனையை படைத்துள்ளனர்.
* ரோகித் சர்மா மற்றும் கே.எல் ராகுல் கூட்டணி ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் என மூன்று விதமான போட்டிகளிலும் முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப்பிற்கு 100 ரன்களை கடந்த இரண்டாவது ஜோடி என்ற சாதனை படைத்துள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு இங்கிலாந்து மண்ணில் சிறந்த ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் ஆக நேற்றைய போட்டியில் ரோகித் சர்மா கே.எல் ராகுல் கூட்டணி இருந்தது.