கணினிமயமாகும் ரேஷன்.. இணையத்தில் அப்லோட் ஆகும் 100 வருட சட்டசபை ஆவணங்கள்.. பிடிஆர் அறிவிப்பு!
சென்னை: 1921ம் ஆண்டிலிருந்து நடைபெற்ற சட்டசபை நிகழ்வுகள் குறித்த அனைத்து ஆவணங்களும் கணினி மயமாக்கப்படும், பொது விநியோகத் திட்டத்தில் மின்னணு கொள்முதல் முறை அமல்படுத்தப்படும் என்று பட்ஜெட் உரையில் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று தனது பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.