இரவு நேரத்தில் கடையை உடைத்து திருட்டில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்த மைலாப்பூர் மாவட்ட காவல்துறை!
பட்டினம்பாக்கம் சீனிவாசபுரத்தில் ஆகஸ்ட் 5ஆம் தேதி இரவு
12 30 a.m மணி அளவில் பலசரக்கு கடையை உடைத்து கைபேசி மற்றும் பணம் மடிக்கணினி மற்றும் இதைத்தொடர்ந்து மயிலாப்பூர் சாய்பாபா கோயில் அருகிலுள்ள உள்ள கடையிலும் உடைத்து மடிக்கணினி பணம் கைபேசி திருடு போயிருந்தது.
இதைத் தொடர்ந்து திருடு போன அந்த கடையின் உரிமையாளர்கள் மயிலாப்பூர் E-1காவல் நிலைய குற்றப்பிரிவில் புகார் அளித்தார்கள்.
கடை உடைத்து திருட்டில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க மயிலாப்பூர் மாவட்ட காவல் துணை ஆணையர் திருமதி/ திஷா மிட்டல் உத்தரவில்
E-5 பட்டினம்பாக்கம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு/ சீனிவாசன் ஆலோசனையில் D-5 மெரினா காவல் உதவி ஆய்வாளர்
திரு/ மாரியப்பன் தலைமையிலான தனிப்படையினர் விசாரணை நடத்தி திருட்டில் ஈடுபட்ட குற்றவாளிகள்
ஜெய்சன், மற்றும் ஆனந்த் இரண்டு நபர்களை கைது செய்து E-1 மைலாப்பூர் குற்றப்பிரிவு காவல்துறையினர் இடம் ஒப்படைத்தனர் .
பட்டினம்பாக்கம் பலசரக்கு கடை மற்றும் மயிலாப்பூர் சாய்பாபா கோவில் அருகிலுள்ள ஒரு கடையிலும் திருடப்பட்ட
மடிக்கணினி மற்றும் கைபேசி பொருட்கள், திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் குற்றவாளி இடம் இருந்து பறிமுதல் செய்தனர்,
மேலும் E-1 மைலாப்பூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரணை நடத்தி நீதிமன்ற உத்தரவின் படி குற்றவாளிகளை சிறையில் அடைத்தனர்.