PF கணக்கில் வரவுள்ளது 8.5% வட்டித் தொகை
EPFO மிக விரைவில் சந்தாதாரர்களின் கணக்கில் 8.5% வட்டி பணத்தை டெபாசிட் செய்யவுள்ளதாக EPFO ட்வீட் மூலம் தெரிவித்துள்ளது.
1. மிஸ்ட் கால் மூலம் இருப்புத் தொகையை அறிந்து கொள்ளலாம்
உங்கள் பிஎஃப் பணத்தை சரிபார்க்க, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 011-22901406 என்ற எண்ணுக்கு ஒரு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும். இதற்குப் பிறகு, நீங்கள் EPFO செய்தி மூலம் PF விவரங்களைப் பெறுவீர்கள். இங்கேயும் உங்கள் UAN, PAN மற்றும் ஆதார் இணைக்கப்பட்டிருப்பது அவசியமாகும்.
2. ஆன்லைனில் இருப்புத் தொகையை சரிபார்க்கலாம்
1. ஆன்லைனில் இருப்புத் தொகையை சரிபார்க்க, EPFO இணையதளத்தில் உள்நுழைந்து, epfindia.gov.in இல் உள்ள e-passbook ஐ கிளிக் செய்யவும்.
2. இப்போது உங்கள் e-passbook ஐ க்ளிக் செய்தால், passbook.epfindia.gov.in -வில் ஒரு புதிய பக்கம் திறக்கும.
3. இதன் பிறகு, நீங்கள் உங்கள் பயனர்பெயர் (UAN எண்), கடவுச்சொல் மற்றும் கேப்ட்சாவை நிரப்ப வேண்டும்.
4. அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்த பிறகு, நீங்கள் ஒரு புதிய பக்கத்திற்கு வருவீர்கள், இங்கே நீங்கள் உறுப்பினர் ஐடியை தேர்ந்தெடுக்க வேண்டும்.
5. இங்கே இ-பாஸ்புக்கில் உங்கள் EPF இருப்பை நீங்கள் காணலாம்.