கொரோனா சிகிச்சை கட்டணம் மாற்றியமைப்பு

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை மாற்றியமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் குறைந்து வரும் கொரோனா தொற்றைக் கருத்தில் கொண்டு, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், கொரோனா சிகிச்சைக்கான கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அரசாணையை வெளியிட்டுள்ளது. அதில், தனியார் மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கான கொரோனா சிகிச்சை கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஆக்சிஜன் அல்லாத படுக்கை வசதிக்கு ரூ.3,000 கட்டணமாக நிர்ணயிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை வசதிக்கு ரூ.7,000 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் வென்டிலேட்டருடன் கூடிய தீவிர சிகிச்சைக்கு ரூ.15,000 கட்டணம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கடுமையான சுவாச செயலிழப்பு ஏற்பட்டோருக்கான வெண்டிலேட்டர் சிகிச்சைக்கு ரூ.56,200 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வெண்டிலேட்டர் அல்லாத தீவிர சிகிச்சைக்கு நாளொன்றுக்கு ரூ.27,100 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.