108MP செல்பீ கேமராவுடன் அறிமுகமான Mi Phone
சியோமி நிறுவனத்தின் பிரீமியம் ஸ்மார்ட்போனாக Mi Mix 4 மாடல் எஸ்டி 888 பிளஸ் SoC போன்ற பிரமிக்கத்தக்க அம்சங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டது.
8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் – ரூ.57,400
8GB + 256GB மாடல் – ரூ.60,800
12GB + 256GB – ரூ.66,600
12GB + 512GB ஸ்டோரேஜ் – ரூ.72,300 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Mi மிக்ஸ் 4 ஸ்மார்ட்போன், செராமிக் பிளாக், செராமிக் ஒயிட் மற்றும் ஆல் நியூ செராமிக் கிரே வண்ண விருப்பங்களில் வருகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 16 முதல் சீனாவில் வாங்குவதற்கு கிடைக்கும்.
Xiaomi Mi Mix 4 இன் மிக முக்கியமான விஷயம் அதன் முன்புறம் ஆகும், இதில் செல்ஃபி கேமராவுக்கு பஞ்ச் ஹோல் எந்த கட்அவுட்டும் இல்லை. முன் ஷூட்டர் உண்மையில் டிஸ்ப்ளேவுக்கு கீழே வைக்கப்பட்டுள்ளது. 6.67-இன்ச் Full HD+ (1,080×2,400 பிக்சல்கள்) 10bit TrueColor AMOLED டிஸ்ப்ளே உள்ளது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 20: 9 திரை விகிதம் உள்ளது.
இந்த புதில் போனில் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ், ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888+ SoC, 12GB வரை LPDDR5 ரேம் உள்ளது. கேமராவை பொறுத்தவரை ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு கொடுக்கபட்டுள்ளது. 108 மெகாபிக்சல் முதன்மை எச்எம்எக்ஸ் சென்சார் (எஃப்/1.95 லென்ஸ்), 13-மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார், 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஷூட்டர் மற்றும் 20 மெகாபிக்சல் செல்பீ கேமரா சென்சார் உள்ளது.
இதில் அல்ட்ரா-வைட்பேண்ட் (யுடபிள்யுபி) ஆதரவு, இது இடஞ்சார்ந்த நிலைப்படுத்தல் (spatial positioning) திறன்களை வழங்குகிறது. பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்கான இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் மேலும் 4,500 எம்ஏஎச் பேட்டரி, 120W வயர்டு சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது.