கோவாக்சின்-கோவிஷீல்ட் கலந்து கொடுப்பது
கொரோனாவுக்கு எதிரான போரில் அடுத்த கட்ட முன்னேற்றமாக, கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் ஆகிய இரண்டு தடுப்பூசிகளையும் கலந்து பயன்படுத்துவது குறித்து அரசாங்கம் ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளது. இணையதளமான ‘India.com’ இல் வெளியிடப்பட்ட செய்திகளின்படி, மத்திய மருந்து ஒழுங்குமுறையின் நிபுணர் குழு, ஜூலை 29 அன்று இந்த ஆய்வை நடத்த பரிந்துரைத்தது. இது குறித்து நடந்த சந்திப்பின் போது, வேலூர் சிஎம்சியில் நான்காம் கட்ட மருத்துவ சோதனைக்கு ஒப்புதல் அளிக்க நிபுணர் குழு பரிந்துரைத்தது. இந்த சோதனையில், 300 ஆரோக்கியமான தன்னார்வலர்களுக்கு கோவிட் -19 (COVID-19) தடுப்பு மருந்துகளான கோவாக்சின் மற்றும் கோவ்ஷீல்ட் ஆகிய இரண்டும் அளிக்கப்பட்டு விளைவுகள் சோதிக்கப்படும்.