Nokia C20 Plus புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்

Nokia C20 Plus மாடல் இன்று இந்தியாவில் அறிமுகமானது மற்றும் விற்பனையையும் தொடங்கி உள்ளது.

நோக்கியா சி 20 பிளஸ் விவரக்குறிப்புகள்
2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட நோக்கியா சி3 பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.8,999-ஆக உள்ளது. பின்பு 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட நோக்கியா சி3 பிளஸ் மாடலின் விலை ரூ.9,999-ஆக உள்ளது. நோக்கியா சி20 பிளஸ் ஸ்மார்ட்போனில் 4950 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டள்ளது. மேலும் 10 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய சாதனம்.

நோக்கியா சி20 பிளஸ் ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் 8எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் இரண்டு கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடலில் ஆக்டோ-கோர் Unisoc SC9863a சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும்ஆண்ட்ராய்டு 11 (Go edition) இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது. 

4ஜி எல்டிஇ, வைஃபை 802.11,ப்ளூடூத் வி4.1, ஜிபிஎஸ்/ஏஜிபிஎஸ், எஃப்எம் ரேடியோ, மைக்ரோ-யுஎஸ்பி,3.5 மிமீ ஹெட்போன் ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published.