கலைஞர் கருணாநிதியின் 3 வது ஆண்டு நினைவஞ்சலி கூட்டம்.
கொழும்பு பிரைட்டன் விருந்தகத்தில் (07.08.2021) அன்று நடைபெற்ற தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அமரர் கலைஞர் கருணாநிதியின் 3 வது ஆண்டு நினைவஞ்சலி கூட்டம் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்ற பொழுது…..
நிகழ்வில் விசேட நினைவுப் பேருரையை முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்,முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவுப் ஹக்கீம் நிகழ்த்தினார். ஆசி உரையினை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் இந்து சமய விவகார ஆலோசகர் கலாநிதி பாபு சர்மா ராமச்சந்திர குருக்கள் நிகழ்த்தினார்.
தொடக்கவுரையை கலைஞ்ர கலைச்செல்வன் நிகழ்த்தினார் மற்றுமொரு சிறப்பு உரையினை மலையக மக்கள் முன்னணியின் சிரேஷ்ட உபதலைவர் முனைவர் சிவலிங்கம் சதீஷ்குமார் நிகழ்த்தினார்.
வரவேற்புரையை
தினகரன் பிரதம ஆசிரியர் செந்தில் வேலவர் நிகழ்த்தியதோடு
இலங்கை அதிமுக .மற்றும் MGR மன்ற தலைவர் இம்ரான் நெய்னார் கலைஞரின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்தார்
விழாவிற்கான ஏற்பாடுகளை இலங்கை இந்திய பத்திரிகை தொடர்பாளர் மணவை அசோகன் மற்றும் கலைஞர் கலைச்செல்வன் ஆகியோர்
ஏற்பாடு செய்திருந்தனர்
செய்தி : இம்ரான் நைய்னார் இலங்கை