கேரளாவில் சுற்றுலா தலங்களுக்கு இன்று முதல் அனுமதி.
கேரளாவில் ஓணம் பண்டிகையையொட்டி வணிக வளாகங்களை 11ஆம் தேதி முதல் திறக்க அனுமதி.
கேரளாவில் தற்போது ஞாயிற்றுக்கிழமைகளில் அமலில் உள்ள முழு ஊரடங்குக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் சுற்றுலா தலங்களுக்கு கொரோனா கட்டுப்பாடு விதிகளுக்கு உட்பட்டு செல்ல இன்று முதல் அனுமதி அளிக்கப்படுகிறது.
சுற்றுலா பயணிகள் கடற்கரைகளுக்கு செல்ல தடையில்லை. ஒரு டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் சுற்றுலா மையங்களில் உள்ள ஹோட்டல் அறைகளில் தங்க அனுமதி அளிக்கப்படுகிறது. கொரோனா காரணமாக சுற்றுலா துறையில் மட்டும் சுமார் ரூ.30 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது” என்றார் முகமது ரியாஸ்.