ஓலா ஸ்கூட்டர்.

ஓலா மின்சார ஸ்கூட்டரை, வாகன ஓட்டிகள், நம்பமுடியாத வேகத்தில் ரிவர்சில் ஓட்ட முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. 

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் (Ola Electric Scooter) 10 வண்ணங்களில் அறிமுகப்படுத்தப்படும் என்று ஓலா எலக்ட்ரிக் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பாவிஷ் அகர்வால் முன்பு அறிவித்தார். மேலும், என்ஜின் திறனைப் பொறுத்த வரையில், பைக்  மூன்று வகைகளில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உதாரணமாக, ஓலா எலக்ட்ரிக் அடிப்படை மாடல் (base model) 45 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய 2 கிலோவாட் மோட்டாரைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடுத்தர மாறுபாடு (mid variant) 4 கிலோவாட் மோட்டார் மூலம் இயக்கப்படும். ஓலா எலக்ட்ரிக்கின் டாப் மாடல் 7 கிலோவாட் மோட்டருடன் வரும் என்றும், 95 கிமீ வேகத்தில் செல்லும் என்றும் கூறப்படுகிறது.

ஓலா (Ola) எலக்ட்ரிக் நிறுவனம் தனது மின்சார பைக்குகளில்  சிறந்த பூட் ஸ்பேஸ்களை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு டீஸர் படத்தில், இரண்டு ஹெல்மெட்களை தாராளமாக வைக்கும் வகையில் பெரிய பூட் ஸ்பேஸ் ஸ்கூட்டரில் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை காண முடிகிறது.

Leave a Reply

Your email address will not be published.