“மகளிர் ஹாக்கி அணி” – பிரதமர் மோடி பாராட்டு
இந்திய மகளிர் அணி வெண்கலப் பதக்கத்தை வெல்லும் என எதிர்பார்ப்புடன் காத்திருந்த இந்திய ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தார்கள் என்றாலும், உறுதியிடன் இறுதிநிலை வரை சென்று சாதனை படைத்த இந்திய ஹாக்கி அணியை அனைவரும் பாராட்டி வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி (PM Modi) ட்வீட் செய்து, ‘டோக்கியோ ஒலிம்பிக்கில் நமது மகளிர் ஹாக்கி அணியின் சிறப்பான செயல்பாட்டை நாடு எப்போதும் நினைவில் கொள்ளும். அணி சிறப்பாக விளையாடியது. அணியின் ஒவ்வொரு உறுப்பினரும் தைரியம், திறமை மற்றும் நெகிழ்ச்சியின் குறிப்பிடத்தக்க சாட்சியாக விளங்கினர். இந்த அற்புதமான அணியால் இந்தியா பெருமை கொள்கிறது. மகளிர் ஹாக்கி அணி புதிய இந்தியாவின் உணர்வை பிரதிபலிக்கிறது’ என்றார்.