டைப் செய்யாமலேயே வாட்ஸ்அப்பில் மெசேஜ்.
வாட்ஸ்அப் பயனர்களின் வசதிக்காக அவ்வப்போது பல புதுப்பிப்புகளை வெளியிட்டு வருகின்றது. பயனர்களின் வசதிகளை அதிகரிக்க இந்த புதுப்பிப்புகள் பயன்படுத்தப்படுகின்றன.
ஆண்ட்ராய்டு (Android) ஸ்மார்ட்போன் பயனர்கள் கூகுள் அசிஸ்டண்ட்டைப் பயன்படுத்தி செய்திகளை அனுப்பலாம். ஐஓஎஸ் பயனர்கள் சிரியைப் பயன்படுத்தி வாட்ஸ்அப் செய்திகளை அனுப்பலாம். நீங்கள் பிஸியாக இருந்தாலோ அல்லது ஒரு செய்தியை தட்டச்சு செய்ய முடியாத நிலையில் செய்தியை அனுப்ப வேண்டும் என்ற நிலை இருந்தாலோ, இது மிகவும் உதவியாக இருக்கும்.
உங்களுக்காக செய்திகளைப் படித்துக் காட்டும் படியும் நீங்கள் உங்கள் டிஜிட்டல் அசிஸ்டெண்டிடம் கேட்கலாம். இதற்கு உங்கள் வர்சுவல் அசிஸ்டெண்ட் உங்களிடம் ஒரு அனுமதியை கேட்கும். உங்கள் பணி நிறைவடைய அதை நீங்கள் வழங்க வேண்டும். உங்கள் போனின் நோட்டிஃபிகேஷன்களுக்கான அனுமதியையும் நீங்கள் அளிக்க வேண்டும்.
இந்த செயல்முறையில், “உங்கள் செய்திகள், காலண்டர் நிகழ்வுகள் மற்றும் பிற முக்கியமான தகவல்களைக் கேட்க, உங்கள் நோட்டிஃபிகேஷனுக்கான அணுகலை Google செயலிக்கு அளிக்கவும்” என்ற செய்தியை கூகிள் காண்பிக்கும். நீங்கள் இதை செட்டிங்கில் சென்று மாற்றலாம். செட்டிங்கில் உள்ள நோடிஃபிகேஷன் பிரிவுக்கு சென்று, Google க்கான நோடிஃபிகேஷன் அணுகலை முடக்கவும்.
நீங்கள் தட்டச்சு செய்யாமல் வாட்ஸ்அப்பில் செய்திகளை அனுப்ப விரும்பினால், கூகிள் அசிஸ்டெண்டின் உதவியுடன் எவ்வாறு இதை செய்யலாம் என்பதைப் பற்றி மேலும் அறிய தொடர்ந்து படிக்கவும்.