யாஷிகாவுக்கு நடிகை வனிதா அறிவுரை.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகை யாஷிகாவுக்கு வனிதா அறிவுரை கூறியுள்ளார்.

இந்த கோர விபத்தில் யாஷிகா மற்றும் அவரது நண்பர்கள் இருவர் படுகாயங்களுடன் உயிர் தப்பிய நிலையில் யாஷிகா ஆனந்த்தின் தோழி வள்ளிச்செட்டி பவணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் காரை அதிவேகமாக ஓட்டியதாக யாஷிகா ஆனந்த் மீது வழக்கு பதியப்பட்டு அவரது ஓட்டுனர் உரிமம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த விபத்தில் சிக்கிய யாஷிகாவுக்கு இடுப்பு மற்றும் முதுகில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் சாதாரண வார்டுக்கு மாற்றம் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது. 

இதற்கிடையில் விபத்துக்கு பின்னர் முதன்முறையாக யாஷிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேற்று சில பதிவுகளை வெளியிட்டிருந்தார். அதில் உயிரிழந்த தனது தோழி குறித்தும் அவர் அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவை பார்த்து சிலர் அவரை திட்டி பதிவு செய்திருந்தனர். 

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக யாஷிகாவுக்கு நடிகை வனிதா அறிவுரை கூறி உள்ளார். அவர் கூறியதாவது., டார்லிங் இது போன்று யாருக்கு வேண்டுமானாலும் நடந்து இருக்கலாம். அதனால் தான் இதை நாம் விபத்து என்கிறோம். பிறப்பும் இறப்பும் முன்பே முடிவு செய்யப்பட்டது. அதை எவராலும் மாற்ற முடியாது. உன் கட்டுப்பாட்டில் இல்லாத ஒரு விஷயத்திற்காக உன்னை நீயே குற்றம்சொல்வதை நிறுத்து. மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை கண்டுகொள்ளாதே. நன்றாக ஓய்வெடு, உடல்நலனை பார்த்துக்கொள். இந்த விபத்தில் இருந்து நீ பிழைத்திருப்பதற்கு ஒரு காரணம் இருக்கும். கடவுள் உன்னை ஆசீர்வதிப்பார் என பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.