ஓடிடியில் வெளியாகும் சூர்யாவின் ஜெய் பீம்.

சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ஜெய் பீம் பதிரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி இல் வெளியாக இருப்பதாக அறிவித்துள்ளனர். 

கூட்டத்தில் ஒருத்தன் திரைப்படைத்தை இயக்கிய டி ஜே ஞானவேல் இயக்கத்தில் சூர்யா தனது 39-வது படத்தில் நடித்துள்ளார். சூர்யா பிறந்தநாளன்று அந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியானது. 

பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படை கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டுஉள்ளது. இந்த படத்திற்கு ஜெய் பீம் (Jai Bhim) என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சூர்யாவின் (Actor Suriya) 2D என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தான் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறது. கர்ணன் பட நடிகை ரஜிஷா விஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சான் ரோல்டன் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படம் வரும் நவம்பர் மாதம் ஓ.டி.டியில் (OTT) வெளிவரும் என 2D என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. 

Leave a Reply

Your email address will not be published.